தொழில்நுட்பச் செய்திகள்
ஹெட்போன்

துப்பாக்கி தோட்டாவில் இருந்து ஒருவரின் உயிரை காப்பாற்றிய ஹெட்போன்

Published On 2022-04-06 05:22 GMT   |   Update On 2022-04-06 05:22 GMT
ஹெட்போனை தயாரித்த நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் அந்த நபர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருடைய உயிரை ரேசர் நிறுவனத்தின் ஹெட்போன் காப்பாற்றியதாக ரெடிட் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவில் அவர் கூறியதாவது:- 

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எனது படுக்கையறையில் படுத்திருந்தபோது ஜன்னல் வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று என் தலையை நோக்கி பறந்து வந்தது. தலையில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் தோட்டா ஹெட்போனில் பட்டு தெரித்தது.

நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்போன் என்பதால் பிழைத்துக்கொண்டேன். ஹெட்போன் என் உயிரை காப்பாற்றியது. இல்லையென்றால் 18 வயதில் நான் இறந்திருப்பேன். இந்த ஹெட்போனை தயாரித்த ரேசர் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன். 

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News