தொழில்நுட்பம்
5ஜி

இந்தியாவில் 5ஜி சோதனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

Published On 2021-05-29 05:19 GMT   |   Update On 2021-05-29 05:19 GMT
இந்தியாவில் நடைபெறும் 5ஜி சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மத்திய டெலிகாம் துறை இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை பயன்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்களுக்கு 700 MHz, 3.5 GHz மற்றும் 26 GHz பேண்ட்களை ஒதுக்கியுள்ளது. 



சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க அனுமதி கிடையாது. 3.5 GHz, 26 GHz மற்றும் 700 MHz ஸ்பெக்ட்ரம்களில் முறையே 800, 100 மற்றும் 10 யூனிட்கள் நிர்ணயம் செய்துள்ளது. 

இந்த ஸ்பெக்ட்ரம்களை ஆறு மாத காலத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ரெடி நெட்வொர்க் வைத்திருப்பதால், இரு நிறுவனங்களுக்கும் இது மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது.
Tags:    

Similar News