உள்ளூர் செய்திகள்
2-வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2022-01-12 11:19 GMT   |   Update On 2022-01-12 11:19 GMT
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த கொரோனா காலத்தில் பணியாற்றியவர் களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறப்பு ஊக்க தொகையை உடனடியாக வழங்க கோரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகம் முன்பு பயிற்சி டாக்டர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இன்று 2&வது நாளாக அவர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து தொடர்ந்து டீன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பயிற்சி டாக்டர்கள் அமைப்புத் தலைவர் விகாஷ் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக சில அரசு டாக்டர்களும் கலந்து கொண்டு பேசினர்.

நெல்லை அரசு மருத்துவ மனையில் உள்நோயாளிகளை பயிற்சி டாக்டர்கள் பெரும்பாலும் கவனித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் 2 நாட்களாக நடத்தி வரும் போராட்டம் காரணமாக உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, தங்கள் கோரிக்கைள் நிறைவேறும் வரை தொடர்ந்து ஈடுபடுவோம் என்றனர்.
Tags:    

Similar News