செய்திகள்
நளினி

நளினிக்கு பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது

Published On 2019-09-12 05:46 GMT   |   Update On 2019-09-12 05:46 GMT
பரோல் காலத்தை மேலும் நீட்டிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாத கால பரோலில் வந்தார். கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

தன் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பரோல் காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது.



இந்நிலையில், தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் கொண்ட அமர்வில் நளினியின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், நளினிக்கு பரோல் காலத்தை நீட்டிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது பரோல் காலத்தை நீட்டிக்கும்படி நளினி கூறியதை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
Tags:    

Similar News