ஆன்மிகம்
ராஜகோபால சுவாமி

ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் ராஜகோபால சுவாமி

Published On 2020-11-15 04:30 GMT   |   Update On 2020-11-13 07:58 GMT
கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார்.
கும்பகோணம் பெரிய கடைத் தெரு பகுதியில் அமைந்திருக்கிறது, ராஜகோபால சுவாமி கோவில். மகாமகம் அன்று, அங்குள்ள குளத்தில் தீர்த்தமாடும் வைணவக் கோவில்களில் இந்தக் கோவிலின் பெருமாளும் ஒருவர். இந்தக் கோவிலில் மூலவராகவும் உற்சவராகவும் ராஜகோபால சுவாமியே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் ருக்மணி, சத்யபாமா, அலமேலுமங்கை, செங்கமலவள்ளி ஆகிய தாயார்களும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’, ‘அரசன்’ என்று பொருள். ‘பாலன்’ என்றால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, இங்கு ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார். இத்தல இறைவன், துணைவியரோடு அலங்காரப் பிரியனாக, ராஜ கம்பீரம் பொருந்தியவராக, எண்ணற்ற அணி கலன்களை உடலில் பூட்டியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

மன்னார்குடியிலும், ராஜகோபால சுவாமி கோவில் ஒன்று உள்ளது. ஆனால் அங்கு மூலவராக மட்டுமே இறைவன் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News