செய்திகள்
பிரதமர் மோடி

‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி

Published On 2019-12-12 23:14 GMT   |   Update On 2019-12-12 23:14 GMT
குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தன்பாத்:

குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த ஒவ்வொரு மாநிலங்களுக்கும், ஒவ்வொரு பழங்குடி சமூகத்துக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்கள் கலாசாரம் மற்றும் உரிமைகளை காப்பதற்கே பா.ஜனதாவும், மத்திய அரசும் முன்னுரிமை அளித்து செயல்படுகின்றன. உங்கள் உரிமைகளை யாரும் பறித்துச்செல்ல முடியாது.

மோடி மீது நம்பிக்கை வைக்குமாறு அசாமை சேர்ந்த சகோதர, சகோதரிகளை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. உங்களின் தனித்துவம் மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்ந்து செழித்து வளரும். இந்த நாட்டின் குடிமக்களுக்கு இந்த மசோதாவால் எந்த விளைவும் ஏற்படாது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News