செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 750 பேருக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2021-04-05 22:32 GMT   |   Update On 2021-04-05 22:32 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாள் ஒன்றின் பாதிப்பு 100-ஐயும் கடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாள் ஒன்றின் பாதிப்பு 100-ஐயும் கடந்து வருகிறது. இது பலரையும் அச்சமடைய செய்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் உயர தொடங்கி வருகிறது.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாநகரில் கொரோனா அதிகரித்துள்ளதால் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பரிசோதனையையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 750 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனா தொற்று இருக்கிறவர்கள் உடனுக்குடன் கண்டறியப்படுகிறார்கள். மேலும், தொற்று அக்கம் பக்கத்தினருக்கு பரவாமலும் தடுக்கப்படுகிறது. எனவே கொரோனா அறிகுறி இருக்கிறவர்கள் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News