லைஃப்ஸ்டைல்
பெண்களின் அழகை கெடுக்கும் கண்களை சுற்றி வளரும் சதை

பெண்களின் அழகை கெடுக்கும் கண்களை சுற்றி வளரும் சதை- தடுப்பது எப்படி?

Published On 2019-11-26 03:44 GMT   |   Update On 2019-11-26 03:44 GMT
கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதைப்போல், சுருக்கங்கள் ஏற்படுவதை போல், இன்றைய நாட்களில் கண்ணைச் சுற்றி பை போன்று சதை தோன்றி, பெண்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதைப்போல், சுருக்கங்கள் ஏற்படுவதை போல், இன்றைய நாட்களில் கண்ணைச் சுற்றி பை போன்று சதை தோன்றி, பெண்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இதனால், பலர் தங்கள் அழகையும், பொலிவான முகத்தோற்றத்தையும் இழந்து வருவதாக குறைபட்டுக் கொள்கிறார்கள்..! இந்த குறையை போக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

1. உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை எனில், தூங்கும் நிலைகளில் ஏதேனும் சரியற்ற நிலை இருப்பின் தூக்கம் பாதிக்கப்படலாம். உடலுக்கு போதுமான அளவு உறக்கம் கிடைக்காத நிலை அல்லது தூக்கத்தில் ஒழுங்கற்ற நிலை இருப்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக விளங்குவது கண்கள் தான். ஆகையால், சரியான தூக்கம் கண்கள் மற்றும் கண்களைச் சுற்றி ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும்..

2. உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, கண்ணைச் சுற்றி பை போன்று ஏற்படக் காரணமாகிறது. ஆகையால், உப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து, அளவான உவர்ப்பு தன்மையுடன் உண்பது நலம் பயக்கும்..

3. நீங்கள் முகத்திற்கு அதிகம் மேக்கப் போட்டுக் கொள்பவராயின், தூங்கும் முன் அவற்றை நீக்கிவிடவும். மேக்கப்புடன் தூங்குவது நல்லதல்ல. ஆகையால், மேக்கப் நீக்கிவிட்டு தூங்குகிறீரா என்பதை தினம் கவனிக்கவும்..

4. மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவற்றை விட்டுவிட முயற்சி செய்யவும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! அவை அழகையும் கெடுக்கும் என்பதையும் உணருங்கள் நண்பர்களே!

5. உங்கள் கண்களை கவனிப்பதில் நேரம் செலுத்துங்கள். அலைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலுத்தி, சிரத்தையோடு பார்ப்பதை தவிர்க்கவும். கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவவும். கண்ணில் வெள்ளரிக்காய் அல்லது குளிச்சி தரும் பொருட்களை வைத்து மிருதுவாக மசாஜ் செய்யலாம்.
Tags:    

Similar News