செய்திகள்
பந்தை விளாசும் ரிஷாப் பண்ட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

Published On 2021-06-23 14:47 GMT   |   Update On 2021-06-23 14:47 GMT
கடைசி நாள் ஆட்டத்தின்போது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
சவுத்தம்டன்:

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 



மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷாப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 170 ரன்களில் முடிவுக்கு வந்தது.  நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. 
Tags:    

Similar News