செய்திகள்
காங்கிரஸ்

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்

Published On 2021-05-11 15:46 GMT   |   Update On 2021-05-11 15:46 GMT
மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது காங்கிரஸ்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 2-வது இடத்தை பிடித்தது. கேரளாவில் எப்போதும் மாறிமாறி ஆட்சியமையும். இந்தமுறை தொடர்ந்த 2-வது முறையாக பினராயி விஜயன் ஆட்சியை பிடித்தார். இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய தோல்வி.

அசாம் மாநிலத்தில் அதிருப்தி காரணமாக கடைசி நேரத்தில் பா.ஜனதா முதல்வரை மாற்றியது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

மேற்கு வங்காளத்தில் இடது சாரியுடன் கூட்டணி அமைத்து ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேபோல் புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கல்.

தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்த திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது காங்கிரஸ் தலைமை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

குழுவின் தலைவராக அசோக் சவான் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் மூத்த தலைவரான மணிஷ் திவாரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சல்மதான் குர்ஷித், வின்சென்ட் எச். பாலா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News