செய்திகள்
கன்வார் பால் குஜ்ஜார்

1 முதல் 3-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் 20-ந்தேதி திறப்பு: ஹரியானா மந்திரி

Published On 2021-09-16 10:08 GMT   |   Update On 2021-09-16 12:35 GMT
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தொடக்க பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டில் இருந்து பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்த நிலையில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காகவும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்காகவும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில கல்வி மந்திரி கன்வார் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும். வீட்டில் இருந்து ஆன்-லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் மூலமாகவும் பாடம் கற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News