செய்திகள்
கோப்புபடம்

சாளையூரில் துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

Published On 2021-06-16 06:49 GMT   |   Update On 2021-06-16 06:49 GMT
குறிச்சிக்கோட்டையில் ஏற்கனவே துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி தொழில்நுட்ப உதவிகள், விதைகள், நுண்ணூட்ட உரங்கள், நுண் உயிர் உரங்கள் உள்ளிட்டவை கிராமத்திற்கு அருகிலேயே கிடைக்கும் வகையில் துணை வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் விதை சேகரிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்குட்பட்ட குறிச்சிக்கோட்டையில் ஏற்கனவே துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில்  தீபாலப்பட்டி, மொடக்குப்பட்டி, வட பூதனம், பெரியபாப்பனூத்து, பெரியவாளவாடி, ஆர்.வேலூர், ரெட்டிபாளையம், ஜே.என்.,பாளையம், தேவனூர்புதூர், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம், கொடிங்கியம், புங்கமுத்தூர், ராவணாபுரம், செல்லப்பம்பாளையம், தின்னப்பட்டி ஆகிய கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் சாளையூரில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன் திறந்து வைத்து பேசினார். அவர் கூறுகையில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டங்களை மானிய விலையில்  துணை வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த சந்தேகங்களை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.
Tags:    

Similar News