உள்ளூர் செய்திகள்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

தூத்துக்குடியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு

Published On 2022-01-04 10:13 GMT   |   Update On 2022-01-04 10:13 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி: 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகர பகுதியில் மிக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுபோல தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள், உயிரிழப்புகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
  
கடந்த 1-ந்தேதி புதுக்கோட்டை அய்யப்பன் நகரை சேர்ந்த தும்பு கம்பெனி தொழிலாளியான அருள்முருகன் (வயது 27) கூட்டாம்புளி சாலையில் வரும்போது மாடு குறுக்கே பாய்ந்ததால் கீழே விழுந்து எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இதுபோன்று மாவட்டத்திலும், மாநகர பகுதியிலும், ஊரகப்பகுதிகளிலும் தினமும் விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகர நிர்வாகம் மற்றும் அனைத்து துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 

மேலும் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் விபத்துக்கள் மூலம் பலியாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News