செய்திகள்
அம்மா உணவகம்

அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம்

Published On 2021-11-15 06:32 GMT   |   Update On 2021-11-15 06:32 GMT
அம்மா உணவகங்களில் கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.
சென்னை:

சென்னையில் கன மழை பெய்து தண்ணீர் சூழ்ந்ததால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு அளிக்கப்பட்டது.

மேலும் 403 அம்மா உணவகங்கள் மூலமும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகள், ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

மழை நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 10-ந்தேதி முதல் அம்மா உணவுகங்களில் உணவு விநியோகிக்கப்பட்டது.

தற்போது மழை முற்றிலுமாக நின்றதால் இன்று முதல் அனைத்து அம்மா உணவங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து அம்மா உணவக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் மழை நின்றதோடு பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News