தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43

பல்வேறு அம்சங்களுடன் இன்று முதல் விற்பனைக்கு வரும் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43

Published On 2022-02-16 06:03 GMT   |   Update On 2022-02-16 06:03 GMT
இந்த டிவியை குறிப்பிட்ட வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டில் வாங்குபவர்களுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் பல்வேறு டிஜிட்டல் கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. 

அந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ ஆகியவற்றை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

43 இன்ச் கொண்ட இந்த டிவியில் 3840 x 2160 பிக்ஸல்களுடன் 4கே டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி பேனல் ஹெச்.டி.ஆர், டோல்பி விஷன், விவிட் பிக்சர் இன்ஜின், ரியாலிட்டி ப்ளோ ஆகியவற்றை கொண்டுள்ளது.  quad-core 64-bit A55 CPU, Mali G52 MP2 GPU ஆகியற்றி துணை கொண்டு இந்த டிவி இயங்குகிறது.

இந்த டிவியில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டுளது. ஆடியோவை பொறுத்தவரை 30W ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் விர்ட்சுவல் எக்ஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்.டி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



மேலும் கூகுள் அசிஸ்டென்ஸ், உட்புறம் அமைந்துள்ள க்ரோம்கேஸ்ட், எம்.ஐ. ஹோம் செயலி, ஸ்மார்ட் ரெக்கமண்டேஷன்ஸ், பல்வேறு மொழிகள், யூசர் சென்டர், ஐ.எம்.டி.பி, குயிக் வேக், பேட்ச்வால் 4 ஒருங்கிணைப்பு, குயிக் மியூட், பெற்றோருக்கு உதவும் கிட்ஸ் மோட், ஆட்டோ லேடன்ஸி மோட், குயிக் செட்டிங்ஸ் ஆகிய பல அம்சங்கள் இந்த டிவியில் தரப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், eARC போர்ட், ஆப்டிக்கள் போர்ட், ஹெட்போன் ஜாக், எதெர்நெட் போர்ட் கணெக்டிவிட்டி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஏ.வி இன்புட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த டிவியின் விலை ரூ. 28,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், எம்ஐ.காம் ஆகிய தளங்களில் இந்த டிவியை வாங்கலாம். கோடாக் மகிந்திரா பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News