செய்திகள்
கோப்புபடம்

மும்முனை மின்சாரம்-விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

Published On 2021-07-15 10:13 GMT   |   Update On 2021-07-15 10:13 GMT
‘கிரிட்’ மின் இருப்பை பொறுத்து தினமும் 10, 12, 15 மணி நேரம் என மும்முனை மின்சாரம் வழங்கும் நேர அளவு மாறுபடும்.
அவிநாசி:

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கிய மனுவில், அவிநாசி தாலுகாவின் சில பகுதிகளில் தினமும் இருமுறை மற்றும் மும்முனை மின்சாரம் சில மணி நேரத்திற்கு ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு மாற்றி, மாற்றி வழங்கப்படுகிறது. கருவலூர், பவர்ஹவுஸ், ராமநாதபுரம் மற்றும் முறியாண்டம்பாளையம் பீடர், அவிநாசி பவர் ஹவுஸ், உப்பிலிபாளையம் மற்றும் செம்மாண்டம்பாளையம் பீடர் சார்ந்த பகுதிகளில் இப்பிரச்னை அதிகம். 

விசைத்தறி தொழில் தொடர்ந்து நடைபெற மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கூறியிருந்தனர். 

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின் வினியோகம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பீடர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 24 மணி நேரமும் மும்முனை மின் சப்ளை வழங்கப்படும். மாநிலம் முழுக்க 2,000 கிராமப்புற பீடர் உள்ளது. இதில் 70 சதவீத மின் இணைப்பு, விவசாய பயன்பாடு சார்ந்தவை. முந்தைய காலங்களில் இந்த இணைப்பில் இருந்து தினமும், குறைந்த பட்சம் 10 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவுக்கு ஏற்ப மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.

சட்டசபை தேர்தல் சமயத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ‘கிரிட்’ மின் இருப்பை பொறுத்து தினமும் 10, 12, 15 மணி நேரம் என மும்முனை மின்சாரம் வழங்கும் நேர அளவு மாறுபடும். கிராமப்புற பீடரில், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதென்பது அரசின் கொள்கை முடிவு. அதற்கேற்ப தான் மின்வாரிய அதிகாரிகளால் செயல்பட முடியுமே தவிர தன்னிச்சையாக செயல்பட முடியாது.
Tags:    

Similar News