ஆன்மிகம்
நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்த போது எடுத்த படம்.

நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2020-11-23 08:39 GMT   |   Update On 2020-11-23 08:39 GMT
நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து சி.என்.பாளையம் சொக்கநாதன் பேட்டையில் இருந்து சாமிக்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News