செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தங்கும் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற ஏற்பாடு

Published On 2021-04-21 06:45 GMT   |   Update On 2021-04-21 06:45 GMT
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருப்பதி:

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து அவ்வப்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கேட்டு கொண்டார்.

அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை குறித்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். திருச்சானூரில் உள்ள பத்மாவதி நிலையம், திருப்பதியில் உள்ள விஷ்ணு சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறைகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டை போல பயன்படுத்த வேண்டும்.


திருப்பதி ரெயில் நிலையம் பின்புறம் உள்ள 2-வது மற்றும் 3-வது சத்திரத்தில் உள்ள பக்தர்கள் ஓய்வறைகள் அவசர தேவைக்கு பயன்படுத்தும் விதமாக மாற்றப்படும். சுவிம்ஸ் மருத்துவமனையில் தற்போது 450 படுக்கைகள் உள்ளது. 5-வது மாடியில் வேலைகளை விரைவில் முடித்து கொரோளா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

எஸ்.வி. ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் கொரோனா பாதித்தவர்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வானொலி மற்றும் ஒளிபரப்பு மூலம் கொரோனா குறித்து பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

திருமலையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினி இருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணு சீனிவாசம் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News