செய்திகள்
காரை நிறுத்தி தொண்டர்களை சந்தித்த அமித் ஷா

காரை பாதியில் நிறுத்தி தொண்டர்களை சந்தித்த அமித் ஷா

Published On 2020-11-21 09:09 GMT   |   Update On 2020-11-21 09:09 GMT
காரை பாதியில் நிறுத்தி சாலையில் இறங்கி தொண்டர்களை பார்த்து அமித் ஷா கையசைத்து நடந்து சென்றார். சாலையின் இருபுறமும் குவிந்துள்ள பாஜக, அதிமுக தொண்டர்களின் வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
சென்னை:

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர்.

இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் ஓட்டல் செல்லும் வழியில் அமித்ஷா காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

சாலையில் இறங்கி தொண்டர்களை பார்த்து அமித் ஷா கையசைத்து நடந்து சென்றார். சாலையின் இருபுறமும் குவிந்துள்ள பாஜக, அதிமுக தொண்டர்களின் வரவேற்பை அமித் ஷா ஏற்றுக்கொண்டார்.

விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா ஓட்டல் செல்லும் வழியில் பாஜக, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினர் கொடியுடனும் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் வரவேற்றனர். சாலையின் இருபுறமும் குவிந்துள்ள அதிமுக, பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் நடனமாடி அமித் ஷாவை வரவேற்றனர்.
Tags:    

Similar News