செய்திகள்
கோப்புப்படம்

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Published On 2020-09-28 23:23 GMT   |   Update On 2020-09-28 23:23 GMT
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மதிப்புக்குரிய சகோதரி லதாவுடன் பேசினேன். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டிக்கொள்கிறேன். நாடு முழுவதும் குடும்பத்தில் ஒருவராக சகோதரி லதா இருக்கிறார். அவரது அன்பும், ஆசியும் கிடைப்பதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News