வழிபாடு
6 அடி உயர நீலகண்ட விநாயகர்

6 அடி உயர நீலகண்ட விநாயகர்

Published On 2021-12-25 08:42 GMT   |   Update On 2021-12-25 08:42 GMT
சுசீந்திரம் கோவிலில் உள்ள விநாயகர் மகா கணபதி, முக்குறுணி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் ஆறு அடி உயரமுடைய இவ்விநாயகரின் சிலையமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீலகண்ட விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவ்விநாயகர் மகா கணபதி, முக்குறுணி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் ஆறு அடி உயரமுடைய இவ்விநாயகரின் சிலையமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.

10 கைகளுடைய கணபதி சிலையின் வலதுபுற கைகளில் சக்கரம் மற்றும் தாமரை, கெதை, ஒடிந்த கொம்பு மற்றும் பழமொன்றும், இடதுப்புற கைகளில் பாசம், அங்குசம், கரும்பு, நெல்மணி கதிர்கள் போன்றவைகளும் கொண்டு காட்சி தருகிறார். இடதுபுறம் ஒரு கையால் சக்தி தேவியை அரவணைத்துக் கொண்டும் அமர்ந்திருப்பதை காணலாம். தெற்குமண்மடம் ஸ்தானிகராக விளங்கிய நீலகண்டரு என்பவர் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்ததால் அவரது பெயராலேயே நீலகண்ட விநாயகர் அழைக்கப்படுகிறார்.

இதேபோல செண்பகராமன் மண்டபத்தில் விநாயகர் பெண் உருவில் காட்சி அளிக்கிறார். மண்டப தூணில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண் உருவில் இருப்பதால் இவரை விக்னேஸ்வரி என அழைக்கிறார்கள். பெண் உருவில் உள்ள விநாயகரை வழிபடுவது நன்மையை கொடுக்கும்.
Tags:    

Similar News