செய்திகள்
பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் பஞ்சலிங்க அருவி.

பலத்த மழையால் வெள்ளம் - பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

Published On 2021-10-18 10:01 GMT   |   Update On 2021-10-18 10:01 GMT
தற்போது அரசு உத்தரவுப்படி ‌உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் .
உடுமலை;

உடுமலை அருகே திருமூர்த்தி மலை வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மலையில் உள்ள பல்வேறு சிற்றாறுகள் ஓடைகள் வாயிலாக அருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது.

கடந்த சில நாட்களாக மலைத்தொடரில் பெய்து வரும் மழையால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது .கொரோனாவால் பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் எந்தவித கழிவுகளும் தேங்காமல் அருவியானது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. பூஜை கால விடுமுறையை  ஒட்டி பல்வேறு பகுதியிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

தற்போது அரசு உத்தரவுப்படி ‌உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் அருவிக்கு செல்ல முடியாமல் மலை அடிவாரம் வரை சென்று திரும்பினர். 

மலைத் தொடரில் மழை பெய்து வருவதால் கோவிலை ஒட்டி செல்லும் இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோவில் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News