ஆன்மிகம்
பால்குடம் ஊர்வலம்

உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம்

Published On 2021-07-28 05:57 GMT   |   Update On 2021-07-28 05:57 GMT
பரப்பாடி அருகே உள்ள பாப்பான்குளம் வெற்றி விநாயகர், முத்துலட்சுமியம்மன், மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடைவிழா 3 நாட்கள் நடைபெற்றது.
பரப்பாடி அருகே உள்ள பாப்பான்குளம் வெற்றி விநாயகர், முத்துலட்சுமியம்மன், மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடைவிழா 3 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நாள் மாக்காப்பு பூஜை, 2-ம் நாள் அதிகாலை சாஸ்தா பிறப்பு பூஜை, காலை பால்குடம் ஊர்வலம், கணபதி ஹோமம், விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு அலங்கார பூஜை, நள்ளிரவு சாம கொடை, அம்மன் ஊர்வலம் நடந்தது.

இன்று (புதன்கிழமை) அம்மன் மஞ்சள் நீராடுதல், மகுடம், நையாண்டி மேளம், வில்லிசை, வாணவேடிக்கை, அன்னதானம் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
Tags:    

Similar News