ஆன்மிகம்
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் வைத்து வழிபாடு செய்ய உருவார பொம்மைகள் தயார்

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் வைத்து வழிபாடு செய்ய உருவார பொம்மைகள் தயார்

Published On 2021-04-26 07:12 GMT   |   Update On 2021-04-26 07:12 GMT
குலதெய்வ கோவில்களில் பசுமாடு மற்றும் காளைமாடு, நாய், பூனை, போன்ற வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளை உருவார பொம்மைகளாக செய்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வளர்த்து வரும் கால்நடைகள் நன்றாக இருக்க வேண்டும், ஆண்டு தோறும் விவசாய நிலங்களில் பாடுபட்டு வரும் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்கவும், கால்நடைகளுக்கு எந்தவித நோய் இன்றி வாழவும் தங்கள் குலம், குடும்பம் செழிக்கவும் வேண்டி தங்கள் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் மற்றும் குலதெய்வ கோவில்களில் பசுமாடு மற்றும் காளைமாடு, நாய், பூனை, போன்ற வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளை உருவார பொம்மைகளாக செய்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மாடு உள்ளிட்ட உருவார பொம்மை செய்து, அதற்கு வர்ணம் தீட்டி விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர். இதனை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
Tags:    

Similar News