ஆட்டோமொபைல்
ஹோண்டா சிவிக்

இந்தியாவில் சிவிக் பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்

Published On 2020-07-04 10:26 GMT   |   Update On 2020-07-04 10:26 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய சிவிக் பிஎஸ்6 கார் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.


ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் ஹோண்டா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான சிவிக் காரை பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது. 

முந்தைய தகவல்களின்படி ஹோண்டா சிவிக் டீசல் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் புதிய சிவிக் பிஎஸ் டீசல் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய டீசல் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலில் மேம்பட்ட 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 வெர்ஷனில் இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருந்தது.

பிஎஸ்6 வெர்ஷனிலும் இந்த என்ஜின் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எனினும், டீசல் வெர்ஷனில் மற்ற வேரியண்ட்களை விட அதிக மைலேஜ் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News