தொழில்நுட்பம்
போக்கோ

விரைவில் இந்தியா வரும் போக்கோ லேப்டாப்

Published On 2020-12-19 05:38 GMT   |   Update On 2020-12-19 05:38 GMT
போக்கோ பிராண்டிங் லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இந்தியாவின் பிஐஎஸ் சான்று அளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது. 

இரண்டு புது லேப்டாப் மாடல்களின் பேட்டரி முறையே R15B02W மற்றும் R14B02W எனும் மாடல் நம்பர்களுடன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கின்றன. இவை போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இவை எம்ஐ லேப்டாப்களின் ரி-பிராண்ட் செய்யப்பட்டு போக்கோ லேப்டாப் மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 



போக்கோ பிராண்டு இதுவரை ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் 2021 ஆண்டில் இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ லேப்டாப் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகலாம் என தெரிகிறது. 

இதுதவிர ஏற்கனவே வெளியான தகவல்களில் போக்கோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதுவும் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு சியோமி நிறுவனம் எம்ஐ நோட்புக் மற்றும் எம்ஐ நோட்புக் ஹாரிசான் எடிஷன் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. போக்கோ லேப்டாப் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 
Tags:    

Similar News