செய்திகள்
ப.சிதம்பரம்

மத்திய அரசு தொடர்ந்து மக்களிடம் பொய் கூறி வருகிறது - ப.சிதம்பரம்

Published On 2021-05-15 17:48 GMT   |   Update On 2021-05-15 17:48 GMT
கோவேக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க அனுமதிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது என மத்திய அரசுக்கு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கிடுங்கள் என காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பின் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்கு ஆளாகிய மக்கள், உயிரை இழந்த மக்களுக்கு யார் பொறுப்பேற்பது? உள்நாட்டு உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான பெரிய இடைவெளியே சிறிய கணிதத்தின் மூலம் யார் செய்யத் தவறியது?.

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டும், இதுவரை மத்திய அரசால் ஒரு வெளிநாட்டு உற்பத்தியாளரைக் கண்டறியவில்லை என்பது சரிதானே. மத்திய அரசு தொடர்ந்து மக்களிடம் பொய் கூறி வருகிறது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News