தொழில்நுட்பம்

இந்தியாவில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையான சியோமி சாதனம்

Published On 2019-03-31 04:45 GMT   |   Update On 2019-03-31 04:45 GMT
சியோமியின் Mi பேண்ட் 3 சாதனம் இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #MiBand3



சியோமியின் Mi பேண்ட் சந்தையில் தற்சமயம் கிடைப்பதில் விலை குறைந்த ஃபிட்னஸ் சாதனமாக இருக்கிறது. இதுதவிர Mi பேண்ட் 3 இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனை படைத்திருக்கிறது. 

இந்தியாவில் Mi பேண்ட் 3 சாதனத்தை சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை Mi பேண்ட் 3 சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மேலும் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.



சியோமி நிறுவனம் Mi பேண்ட் 3 விற்பனை மைல்கல் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் Mi பேண்ட் 3 விற்பனை செய்யப்படுகிறது. இதில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்வைப் ஜெஸ்ட்யூர் வசதி, 110 எம்.ஏ.ஹெச். லி-அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.

ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் Mi பேண்ட் 3 மாடலில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. Mi பேண்ட் 3 சாதனம் கொண்டு ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளம் அல்லது அதன் பின் வெளியான இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் உலகளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது.
Tags:    

Similar News