செய்திகள்
வீடு, வீடாக ஆக்சிஜன் மற்றும் உடல் வெப்ப நிலை கண்டறியும் பரிசோதனை

வீடு, வீடாக ஆக்சிஜன் மற்றும் உடல் வெப்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம்

Published On 2021-06-06 18:28 GMT   |   Update On 2021-06-06 18:28 GMT
ராமாபுரம் ஊராட்சியில் வீடு, வீடாக ஆக்சிஜன் மற்றும் உடல் வெப்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மன்னார்குடி:

கொரோனா தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடி ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் விழிவழகன் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை ஆகிய கிராமங்களில் உள்ள 450 வீடுகளுக்கும் நேரில் சென்று 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்ப நிலை கண்டறியும் பரிசோதனையை மேற்கொண்டனர்.

மேலும் ராமாபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News