செய்திகள்
கைது

வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது

Published On 2019-11-05 09:15 GMT   |   Update On 2019-11-05 09:15 GMT
வேலூர் மாவட்டத்தில் 4 போலி டாக்டர்களை கைது செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இவர்கள் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில் 55 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 20 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து போலி டாக்டர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையிலான குழுவினர் 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி டாக்டர்கள் பலர் கிளினிக்கை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர். குடியாத்தம் பகுதியில் கிளினிக் நடத்திவந்த போலி டாக்டர்கள் பெரியப்பா, ராகவன் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

மேலும் ஊசூர் கூட் ரோட்டில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் மஞ்சுளா, கத்தாழம்பட்டு கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் பரமேஸ்வரி ஆகியோரை சுகாதாரத்துறையினர் பிடித்தனர்.

4 போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவம் பார்க்க பயன்படுத்திய ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து போலி டாக்டர்களை பிடிக்க சுகாதாரத்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News