செய்திகள்
அரிசி

மூங்கில்துறைப்பட்டு பகுதி ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம்

Published On 2021-08-01 15:58 GMT   |   Update On 2021-08-01 15:58 GMT
ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் அரிசிதான் பசியை போக்கும் உணவாக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு வரும் காலங்களிலாவது நல்ல தரமான அரிசியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு சுற்றுவட்ட பகுதிகளான பொருவளூர், பொரசப்பட்டு, உலகலாப்பாடி, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், மேல் சிறுவல்லூர், பாக்கம், புதூர், கடுவனூர், லக்கிநாயக்கன் பட்டி, ரங்கப்பனூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சமீபகாலமாக பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது குறிப்பாக அரிசி முழுவதும் கருப்பு நிறத்தில் இருப்பதால் உணவு சமைத்தால் கருப்பு நிறமாக இருப்பதோடு சுவயும் கசப்பாகவே உள்ளது. மேலும் அதிக அளவில் நாற்றம் வெளி வருகிறது. அரிசியை சமைத்து சாப்பிடுவதால் உடல் ரீதியாக உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவரிடம் கேட்டபோது அனைத்து பகுதிகளுக்கும் இதுபோன்ற அரிசி தான் வருகிறது. அரிசி வாங்க வரும் பொதுமக்கள் அரிசி தரமற்று இருப்பதால் அதை எப்படி பயன்படுத்த முடியும் என்று எங்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். நாங்களும் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற அரிசிதான் வந்து கொண்டு இருக்கிறது என்றார்.

வசதி படைத்தவர்கள் கடைகளில் பணம் செலவழித்து நல்ல அரிசியை வாங்கி சாப்பி்டடு வருகிறார்கள். ஆனால் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் அரிசிதான் பசியை போக்கும் உணவாக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு வரும் காலங்களிலாவது நல்ல தரமான அரிசியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News