செய்திகள்
துணை ராணுவப்படையினர்

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 81 ஆயிரம் துணை ராணுவப்படையினர் விருப்ப ஓய்வு

Published On 2021-07-17 03:10 GMT   |   Update On 2021-07-17 03:10 GMT
கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், துணை ராணுவப்படையை சேர்ந்த 15 ஆயிரத்து 904 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
புதுடெல்லி:

சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சாஷஸ்ட்ரா சீமா பால், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, அசாம் ரைபிள்ஸ் ஆகிய 6 துணை ராணுவப்படைகளில் மொத்தம் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த படைகளில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுவரை 81 ஆயிரத்து 7 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, எல்லை பாதுகாப்பு படையில் மட்டும் 36 ஆயிரத்து 768 பேர் விலகி உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.

மேலும், இதே காலகட்டத்தில், துணை ராணுவப்படையை சேர்ந்த 15 ஆயிரத்து 904 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

விருப்ப ஓய்வு, ராஜினாமா ஆகியவற்றுக்கான காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசேஷ ஆய்வு எதுவும் நடத்தவில்லை.

இருப்பினும், தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சினைகள், உடல்நலக்குறைவு, வேறு சிறந்த பணிவாய்ப்பு ஆகியவைதான் முக்கியமான காரணங்கள் என்று துணை ராணுவப்படையினரே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News