செய்திகள்
லட்சுமி நரசிம்மன்

திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2019-10-21 06:19 GMT   |   Update On 2019-10-21 06:19 GMT
திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர், கபிலர் நகர், பாபா தெருவை சேர்ந்தவர் சின்ன ராஜா. இவரது மகன் லட்சுமி நரசிம்மன். பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்மனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. உடல் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை சென்னை அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்று டாக்டர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News