செய்திகள்
நிதி அமைச்சகம்

ஐ.நா வரிக் குழுவில் இந்திய நிதி அமைச்சக அதிகாரி ராஸ்மி ரஞ்சன் தாஸ்

Published On 2021-07-22 10:24 GMT   |   Update On 2021-07-22 10:24 GMT
தங்கள் அரசால் கூடுதல் வரி பரிந்துரைக்கப்பட்டாலும், குழு உறுப்பினர்கள் தங்களது தனித்திறனில் பணியாற்றி சுலபமாக்குவார்கள் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

2021 முதல் 2025ம் ஆண்டிற்கான ஐ.நா. வரிக் குழுவின் உறுப்பினர்களாக உலகெங்கிலும் உள்ள 25 வரி வல்லுநர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. இதில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலாளரான ராஸ்மி ரஞ்சன் தாஸும் இடம்பெற்றுள்ளார்.

வரி சம்பந்தமான சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஐ.நா. நிபுணர்களின் குழுவாக அறியப்படும் இக்குழு, பெருகிவிட்ட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொருளாதாரம், மோசமான சுற்றுச்சூழலுக்கு நடுவே உலகமயமாக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தன்மைக்கு ஏற்றவாறு வலுவானதாகவும் முற்போக்கு வரிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கும் வழிகாட்டும்.



பல்வேறு வரிவிதிப்பைத் தடுப்பதற்கும், வரிவிதிப்பை விரிவாக்குவதற்கும், வரி நிர்வாகங்களை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச வரி ஏய்ப்பையும், வரி செலுத்தலைத் தவிர்ப்பதையும் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு இது உதவும்.

 புதிய குழுவில் இரட்டை வரி ஒப்பந்தங்கள், பரிமாற்ற விலை நிர்ணயம், வரி மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் அதைத் தீர்ப்பது, தொழில்களுக்கான வரிவிதிப்பு, டிஜிட்டல் பொருளாதாரத்தின் வரிவிதிப்பு, சுற்றுச்சூழல் வரிவிதிப்பு மற்றும் மதிப்பு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வரி பயிற்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

தங்கள் அரசால் கூடுதல் வரி பரிந்துரைக்கப்பட்டாலும், குழு உறுப்பினர்கள் தங்களது தனித்திறனில் பணியாற்றி சுலபமாக்குவார்கள் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரி வாரியம், வருவாய் துறை, நிதி அமைச்சகத்திற்கு இந்தியாவின் ரஸ்மி ரஞ்சன் தாஸ் இணை செயலாளராக உள்ளார். ஐ.நா. வரிக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் நைஜீரியா, சிலி, தென் கொரியா, மலாவி, மெக்சிக்கோ, அயர்லாந்து, இந்தோனேசியா, மியான்மர், அங்கோலா, ரஷ்யா, கனடா, நார்வே, ஜெர்மனி, இத்தாலி, சுவீடன் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த குழு வளரும் நாடுகள் மற்றும் அவற்றின் கொள்கைச் சூழலுக்கும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். முதல்முறையாக இந்த குழுவில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு வரிக் குழு மற்றும் சர்வதேச வரி விவகாரங்களில் சர்வதேச ஒத்துழைப்பை இதன் மூலம் ஐ.நா. ஊக்குவிக்கிறது.

மேலும், இது நாட்டில் சமூகம், வணிகம், கல்வித்துறை ஆகியவற்றை உற்றுநோக்குகிறது.

ஐ.நா. வரிக் குழு தொழில்நுட்ப ரீதியாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட  முறையில் பொருளாதார வரிவிதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது என்று ஆப்பிரிக்க வரி நிர்வாக மன்றத்தின் நிர்வாக இயக்குனர் லோகன் வோர்ட் கூறினார். மேலும், குழுவின் புதிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெறும், அப்போது வல்லுநர்கள் தங்கள் பதவிக் காலத்திற்கான பணித் திட்டத்தை அறிக்கையாக தெரிவிப்பார்கள்.
Tags:    

Similar News