செய்திகள்
வைரல் புகைப்படம்

பீகார் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டம் என கூறி வைரலாகும் வீடியோ

Published On 2020-10-30 04:56 GMT   |   Update On 2020-10-30 04:56 GMT
பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.


பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 53 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71 தொகுதிகளுக்கு மொத்தம் 1066 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் தீவிரமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரிய கூட்டத்தினர் பாஜகவுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்த வீடியோ சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வலதுசாரிகளை அடித்து விரட்டும் பீகார் மக்கள் எனும் தலைப்பில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது ஹரியானாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த வீடியோ பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது ஆகும். 

அந்த வகையில் பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News