தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம்

இனி இன்ஸ்டாவிலும் இந்த அம்சம் கிடைக்கும்

Published On 2020-03-23 06:17 GMT   |   Update On 2020-03-23 06:17 GMT
இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் அந்த அம்சமும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.



இன்ஸ்டாகிராம் செயலில் புதிய அம்சம் ஒன்று சோதனை செய்யப்படுகிறது. ஸ்னாப்சாட் செயலியில் உள்ள ஸ்டோரீஸ் அம்சம் போன்று புதிய அம்சம் இருக்கும். இது இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் மற்றொருவர் படித்ததும், குறுந்தகவல் தானாக மறைந்து போக செய்யும்.

ரிவர்ஸ் என்ஜினியரிங் பொறியாளரான ஜேன் மன்சுன் வொங் என்பவர் இந்த அம்சத்திற்கான குறியீடுகளை கண்டறிந்து இருக்கிறார். 'ஸ்பீக் நோ ஈவில்' எமோஜி எனும் பெயரில் உருவாகி வரும் புதிய அம்சம் பல்வேறு சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிறது.

புதிய அம்சத்தை உறுதிப்படுத்தும் வீடியோவினை வொங் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பயனர் அனுப்பும் குறுந்தகவல் தானாக மறையும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய அம்சம் முதற்கட்ட சோதனைகளில் உள்ளதாக வொங் தெரிவித்து இருக்கிறார். 

குறுந்தகவல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். இந்த அம்சம் முதற்கட்ட சோதனைகளில் உள்ளது. என இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ட்விட்டர் தளத்திலும் இதேபோன்ற அம்சம் ஃபிளீட்ஸ் எனும் பெயரில் சோதனை செய்ய துவங்கியது. ஸ்னாப்சாட் மூலம் பிரபலமான மறைந்து போகச் செய்யும் அம்சம் தற்சமயம் முன்னணி தளங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News