ஆன்மிகம்
தாமிரபரணி படித்துறை

நாளை மகாளய அமாவாசை: தாமிரபரணி படித்துறையில் திதி கொடுக்க 6 நாட்கள் தடை

Published On 2021-10-05 06:21 GMT   |   Update On 2021-10-05 06:21 GMT
இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசையொட்டி பொதுமக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாச சுவாமி கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

அப்போது அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் செய்வார்கள்.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே வழிபாட்டு தலங்களில் வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து நாளை மகாளய அமாவாசையையொட்டி கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தாமிரபரணி படித் துறைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சொரிமுத்து அய்யனார் கோவிலிலும், பாபநாச கோவில்களிலும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து கோவில்கள் மற்றும் படித்துறைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News