உள்ளூர் செய்திகள்
பாளை தெற்கு பஜாரில் பதநீர் குடிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நெல்லையில் முதல் நாளிலேயே உக்கிரம் காட்டிய அக்னி வெயில்

Published On 2022-05-04 10:54 GMT   |   Update On 2022-05-04 10:54 GMT
நெல்லையில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கு–வதற்கு முன்பாகவே கடந்த  சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் பொது–மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்தனர். கடும் வெயிலால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் குடைகளை பிடித்தபடி செல்கின்றனர்.

கடும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்ளான பதநீர், நுங்கு, கூழ் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியது. இன்று முதல் 28 நாட்கள் இந்த அக்னி வெயில் நீடிக்கும். முதல் நாளான இன்றே வெயில் உக்கிரம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

 இதனால் மாநகரின் பல இடங்களில் சாலைகளில் கானல்நீர் தோன்றியது.மேலும் டவுன், வண்ணார்பேட்ைட, பாளை, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த அளவில் இருந்தது.

இதே ேபால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

அத்தியாவசிய பணி மற்றும் பணி நிமிர்த்தமாக சென்றவர்கள் குடைபிடித்தபடி சென்றதை காண முடிந்தது.

மேலும்  வாகனங்களில் செல்வோர் குறிப்பாக பெண்கள் முகத்தை துப்பட்டாவால் மூடியும், கையை மறைக்கும் வகையில் கையுறை அணிந்தும் சென்றதை பார்க்க முடிந்தது. மேலும் மாநகரில் உள்ள குளிர்பான கடைகளிலும் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி உள்ளதால் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
Tags:    

Similar News