செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published On 2019-11-05 21:06 GMT   |   Update On 2019-11-05 21:06 GMT
ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மும்பை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் ரியல் எஸ்டேட் துறையை புதுப்பிக்க உதவவில்லை. ஆகஸ்டு மாதத்தில் இருந்து ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுவரை நான் தொடாத இந்த துறையில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.

மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தேவைப்பட்டால் இப்போது உள்ள விதிகளில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துறையில் முதலீடு செய்ய நிதி தயாராக இருந்தாலும் கொள்கை ரீதியான ஆதரவும் தேவைப்படுகிறது. இப்போது இந்த துறையில் நேர்மறையான தாக்கம் வெளிப்பட தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News