ஆன்மிகம்
திருக்கல்யாண உற்சவத்தையொட்டி பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

Published On 2021-03-11 07:16 GMT   |   Update On 2021-03-11 07:16 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருட்களை வைத்து சமர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. 14-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

அதையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் மந்திரி பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி மற்றும் அவரின் மனைவி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வெள்ளி தட்டுகளில் பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருட்களை வைத்து சமர்ப்பணம் செய்தனர்.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் சன்னதியில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தலையில் சுமந்து அலங்கார மண்டபம் வரை வந்து கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சி.வி.நாயுடு மற்றும் கோவில் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News