தொழில்நுட்பம்
ஒன்பிளஸ்

சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒன்பிளஸ் 8டி

Published On 2020-06-16 09:46 GMT   |   Update On 2020-06-16 09:46 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனம் வார்ப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனுடன் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் ஒரு நாளுக்கு தேவையான சார்ஜ் அதாவது 50 சதவீதத்தை 20 நிமிடங்களிலும், 100 சதவீதம் சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் தான் எடுத்துக் கொள்ளும் என ஒன்பிளஸ் தெரிவித்தது.

இதன் பின் வார்ப் சார்ஜ் 30டி தொழில்நுட்பத்தை 7டி சீரிஸ் மாடலுடன் அறிமுகம் செய்தது. இதே தொழில்நுட்பம் ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.



தற்சமயம் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஆண்ட்ராய்டு 11 பீட்டா என்ஜினீயரிங் மோட் செயலியில் 65 வாட் சூப்பர் வார்ப் சார்ஜர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ஒப்போ ஏற்கனவே 65 வாட் சூப்பரவூக் 2.0 தொழில்நுட்பத்தை ரெனோ ஏஸ், ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கிறது.

ஒப்போ தவிர ரியல்மி நிறுவனமும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ரியல்மி எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 
Tags:    

Similar News