செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-04-04 13:26 GMT   |   Update On 2021-04-04 13:26 GMT
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 7 சதவீத வட்டி மானியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்காததை கண்டித்தும், இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அனந்தசயனன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஏ.சேகர், மாநில இணை செயலாளர் ஆர்.ஜி.சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் மாவட்ட பொருளாளர் செந்தில், துணைத்தலைவர்கள் மூர்த்தி, பன்னீர்செல்வம், இணை செயலாளர்கள் செந்தில்முருகன், காமராஜ், போராட்டக்குழு தலைவர் குமார், செயலாளர் ஜெய்சங்கர், வடக்கு மண்டல துணைத்தலைவர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கண்டமங்கலம் ஒன்றிய நிர்வாகி புருஷோத்தமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News