செய்திகள்
திருப்பதி ரெயில் நிலையம்

திருப்பதி ரெயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்

Published On 2020-09-15 05:33 GMT   |   Update On 2020-09-15 05:33 GMT
திருப்பதி ரெயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
திருப்பதி:

திருப்பதி ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இங்கு வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

இங்குள்ள ரெயில் நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சாரம், செடி, மரங்கள் வளர்ப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணச்சீட்டு முன்பதிவு வசதிகள், நீர் மேலாண்மை பராமரிப்பு சிறப்பாக இருப்பதால் ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News