செய்திகள்
இஷாந்த் சர்மா

12 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட் எடுத்த இஷாந்த் சர்மா

Published On 2019-11-23 11:39 GMT   |   Update On 2019-11-23 11:39 GMT
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 12 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட் எடுத்துள்ளார்.
கொல்கத்தா:

இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது.

இளம் சிவப்பு நிற பந்தில் (பிங்க்) இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி சாதித்தனர். முதலில் ஆடிய வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்னில் சுருண்டது.

வங்காளதேச அணியின் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீரர்களே கைப்பற்றினார்கள். குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 12 ஓவர் வீசி 22 ரன் கொடுத்து (4 மெய்டன்) 5 விக்கெட் வீழ்த்தினார்.

அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் உள்ளூர் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு தனது 37-வதுடெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூர் டெஸ்டில் 118 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

தற்போது 96-வது டெஸ்டில் 2-வது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
Tags:    

Similar News