சமையல்
ரவா ஓட்ஸ் அடை

ருசியான சத்தான ரவா ஓட்ஸ் அடை

Published On 2022-01-01 05:13 GMT   |   Update On 2022-01-01 05:13 GMT
ரவையில் உப்புமா, தோசை, கிச்சடி மட்டுமின்றி விதவிதமான பலகாரங்களையும் தயார் செய்து ருசிக்கலாம். இன்று ரவையை கொண்டு அடை செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையானவை:

ரவை -1 கப்
ஓட்ஸ் - அரை கப்
பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:


வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ரவையை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

அதுபோல் ஓட்ஸையும் வறுக்கவும்.

பின்னர் ரவை, ஓட்ஸ், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, சோம்பு தூள் ஆகியவற்றை ஒன்று கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி மாவை சற்று கனமாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

ருசியான ரவா ஓட்ஸ் அடை தயார்.
Tags:    

Similar News