தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் 9 சீரிஸ்

ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் கோளாறு - உடனடி பதில் கொடுத்த நிறுவனம்

Published On 2021-04-08 11:41 GMT   |   Update On 2021-04-08 11:41 GMT
ஒன்பிளஸ் 9 ப்ரோ வாடிக்கையாளர்கள், புதிய ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்படுவதாக தெரிவித்தது வருகின்றனர்.


ஒன்பிளஸ் 9 ப்ரோ பயன்படுத்தும் பெரும்பாலானோர் தங்களின் ஸ்மார்ட்போன் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு சூடாவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். குற்றச்சாட்டுகள் அதிகரித்ததை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பதில் அளித்துள்ளது.



அதன்படி வரும் வாரங்களில் புது மென்பொருள் அப்டேட் மூலம் பிரச்சினை சரி செய்யப்பட்டு விடும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம், வீடியோ எடுக்கும் போது போன் அதிக சூடாகிறது என கூறும் எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர். 

ஒன்பிளஸ் சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோ மாடல்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்கியது. புதிய ஆக்சிஜன் ஒஎஸ் 11.2.2.2 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் லெவல்களை வழங்குகிறது. இத்துடன் பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டது.
Tags:    

Similar News