உள்ளூர் செய்திகள்
ஈரோடு ஸ்டோனி பாலம் மார்க்கெட்டில் மீன் விற்பனை நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்தது

Published On 2022-04-17 09:05 GMT   |   Update On 2022-04-17 09:05 GMT
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.

கடல் மீன்கள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

ஈரோட்டில் தினமும்  80 டன் மீன்கள் வரத்து ஆகி வந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்கள் வரத்து குறைந்துவிட்டது. இதனால் இன்று 30 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி உள்ளது.

இன்று காலை முதலே ஸ்டோனி பாலம் மீன் மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. 

மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலையும் எகிறியுள்ளது. வஞ்சரம் மீன் போனவாரம் கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இந்த வாரம் மேலும் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.950 வரை விற்பனையானது.

இன்று விற்கப்பட்ட மீன்கள் விலை கிலோவில் வருமாறு: உளி-ரூ.450, வஞ்சரம்-ரூ.900 முதல் ரூ.950, வாவல்-ரூ.500, அயிலை-ரூ.180, சங்கரா-ரூ.350, ராட்டு-ரூ.150, மத்தி-ரூ.450, தேங்காய் பாறை-ரூ.350, டுயானா-ரூ.300, நண்டு-ரூ.350, நெத்திலி-ரூ.250.

இதேபோல் ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று குறைந்த அளவில் மீன்கள் வர ஆகியிருந்தன. ஆனால் காலை முதலே மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

மீன்கள் விலை உயர்ந்தாலும் இன்று விற்பனை விறுவிறுப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News