இந்தியா
பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சி தலைமை என்பது தனிநபர் உரிமை அல்ல - பிரசாந்த் கிஷோர்

Published On 2021-12-02 19:24 GMT   |   Update On 2021-12-02 19:24 GMT
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மும்பையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அதன்பின் பேசிய மம்தா பானர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி எஞ்சவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் புனித உரிமை அல்ல என அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் புனித உரிமை அல்ல. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் யோசனையும் காங்கிரசுக்கான இடமும் இன்றியமையாதது, எதிர்க்கட்சித் தலைமையை ஜனநாயகம் முடிவு செய்யட்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News