ஆன்மிகம்
ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு

ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2021-09-17 04:06 GMT   |   Update On 2021-09-17 04:06 GMT
நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடம்புறப்பாடாகி கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது.
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி கொச்சுகுத்தகை பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நேற்று கடம்புறப்பாடாகி கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து கலந்துகொண்டனர். முன்னதாக கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

இதேபோல திருமருகல் வடக்கு வீதியில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலும், கங்களாஞ்சேரி அய்யனார் கோவில், அருங்குழலி அம்மன், தூண்டிக்காரன் கோவில்களிலும் குடமுழுக்கு நடந்தது.
Tags:    

Similar News