செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய புதிய இணையதளம்

Published On 2020-10-16 14:55 GMT   |   Update On 2020-10-16 14:55 GMT
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யாவிடில் சட்டப்படி நடவடிக்கை என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா முழு முடக்கத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருமானம், வேலை, உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர். போக்குவரத்து தடையால் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக நடந்து சென்றனர். இதில் பலர் பட்டினியாலும், வெயில் தாக்கத்தினாலும் உயிரிழந்தனர்.

இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது, அதன்பின் மத்திய அரசு, மாநில அரசுகள் அவர்களை சொந்த நாடு அனுப்பினர்.

ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசிடமும் இல்லை. மாநில அரசிடமும் இல்லை.

இந்நிலையில் தமிழக அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒரு இணைய தளம் தொடங்கியுள்ளது. இந்த இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் labour.tn.gov.in/sm என்ற இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
Tags:    

Similar News